![](https://i0.wp.com/www.tamilwin.lk/wp-content/uploads/2024/06/2589035-untitleddesign-2024-06-11t124046453.webp?fit=640%2C384&ssl=1)
அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கைலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: விமான விபத்தில் மலாவி துணை அதிபர் மரணம்
பல்மோனரி பிலெப் எனப்படும் இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க ஐந்தரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினர். இதனால் கைலா உயிர்பிழைத்தார்.
இதுகுறித்து கைலாவின் தந்தை கூறுகையில், 'எனது மகள் படும் வேதனையை பார்த்து நான் ஒரு குழந்தையைப் போல் அழுதேன். அவளுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. அவள் இறக்கப்போகிறாள் என்றே பயந்தேன், தயவு செய்து இளஞர்கள் புகைப்பழக்கத்தை கை விடுங்கள், அதனால் ஒரு பயனும் இல்லை, Its not worth it' என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: சுனிதா வில்லியம்ஸின் உயிருக்கு ஆபத்தா?- விண்வெளி மையத்தில் ஆபத்தான பாக்டீரியா கண்டுபிடிப்பு
சிகிச்சைக்ககுப் பிறகு உடல் தேறி வரும் கைலா பேசுகையில், 'எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன். ஆனால் இப்போது நன் அனுபவித்த வலிக்கு பிறகு நீ ஒருபோதும் சிகரெட்டை தொடப்போவதில்லை' என கூறினார்.
சிகெரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிகெரெட் புகையை உள்ளிழுக்கும்போது நுரையீரலுக்குள் நச்சுத்தன்மை கொண்ட கேமிக்கல்களும், யுரேனியமும் படிமங்களாக சேகரமாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.