புற்றுநோய்க்கான மருந்துகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான புற்றுநோய்க்குரிய மருந்துகளின் முதலாவது தொகுதியானது சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் அமெரிக்காவின் டே சான்ஸ் செரிடீஸ் தொண்டு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.