பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அமுல்படுத்தாத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தொழில் ஆணையாளருக்கு இதனை உத்தியோகபூர்வமாக, கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்ட 1700 ரூபாய் சம்பளத்தை பல பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கியிருக்கவில்லை.

எனவே, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்த தவறியமை தொடர்பில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.