கண்டியில் மலைப்பாதையிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கண்டி , ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 ஆவது மலைப்பாதையிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (10) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

கம்புருப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 5 ஆம் திகதி அன்று தனது குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.