மழையுடனான காலநிலையின் பின்னர் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

மழையுடனான காலநிலையின் பின்னர் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 92 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், 9441 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளை மையமாகக் கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார்.