அடி காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி!

முக்கிய செய்திகள் 1

பலத்த காயங்களுடன் இளைஞன் ஒருவன் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகிலிருந்தே அடி காயங்களுடன் இளைஞன் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

பாலத்துக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் இளைஞன் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கல்குடா அகீல் அனர்த்த அவசர சேவைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய அதன் பணிப்பாளர் நியாஸ் ஹாஜியார் குழுவினர் இளைஞனை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

புத்தளம் பஸ் வண்டியில் வந்த குறித்த இளைஞனும் இன்னுமொரு இளைஞனும் ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் பஸ் வண்டி நிறுத்தப்பட்டிருந்த போது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த இளைஞன் மீது மற்றைய இளைஞன் பொல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.