வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

முக்கிய செய்திகள் 2

கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும், வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ கனரக வாகன இறக்குமதி ஒக்டோபர் மாதம் இடம்பெறும் என பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை.

மேலும் வாகன இறக்குமதிகளை மேற்கொள்வது சாத்தியமா? என்பது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.