பேருந்து விபத்து – 05 பேர் காயம்!

முக்கிய செய்திகள் 1

கொட்டாவை - மகும்புர அதிவேக நெடுஞ்சாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது

அதன்படி இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதுக்காவில் சென்ற தனியார் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது, ​​பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால், சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், நின்றிருந்த மற்றுமொரு பேருந்தில் பேருந்து மோதியுள்ளது.

அத்துடன் பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.