மின் இணைப்பில் சிக்கி இளைஞன் பரிதாபமாக பலி

முக்கிய செய்திகள் 1

பொலன்னறுவை, வெலிக்கந்த, நாமல்கம பகுதியில் வயல்வெளியில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

நாமல்கம, வெலிக்கந்த பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்ததாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் இருவருடன் வயலுக்குச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.