உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை தொடும் இளைஞர் – விசாரணை ஆரம்பம்

முக்கிய செய்திகள் 1

உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞர் ஒருவர் தொடும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. இது தொடர்பில் அநுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த காணொளி அநுராதபுரம் ரணஜயபுர காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரணஜயபுர காட்டுப்பகுதிக்குள் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த யானையின் அருகில் மெதுவாகச் சென்று அதைத் தொட்டுவிட்டுவரும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.

காட்டு யானையை எப்படி நெருங்குவது என்பதை காண்பிக்க, ஒரு சாகச செயலாக இந்த காணொளியை இளைஞர்கள் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள வனவிலங்கு திணைக்களம், இது ஆபத்தான செயல், காணொளியை பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட எவரும் முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Trending Posts