நகைக் கடை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய மூவர் கைது

முக்கிய செய்திகள் 1

கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை , தங்காலை பிரதேசத்தில் உள்ள நகைக் கடையொன்றை உடைத்து 34,600,000 ரூபா பெறுமதியான நகைகள், மாணிக்கக் கற்கள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடித் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை ,கிரம பிரதேசத்தைச் சேர்ந்த 22, 23 மற்றும் 27 வயதுடைய மூன்று நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.