பருத்தித்துறை வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து மருத்துவர் தற்கொலை

முக்கிய செய்திகள் 2

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து இன்று உயிர்மாய்த்துள்ளார் ..

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றிய பிரேம்குமார் கிரிசாந் (30) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட காதல் விவகாரம் இந்த தற்கொலைக்கான காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது மூக்கிற்குள் பஞ்சு வைக்கப்பட்டிருந்த. அவர் ஏதோ ஒரு வகை மருந்தை செலுத்தி உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts