கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவொன்று இன்று (12) குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 35 பேர் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மேல் காகம வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அதில் மாணவர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.