அனலைதீவு கடற் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் மாயம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அனலைதீவு கடற் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இது தொடர்பில் அவர்களது உறவினர்கள் அனலைதீவு கடற்படை முகாமிலும் காவல்துறையினரிடமும் நேற்றையதினம் (11) முறைப்பாடு செய்துள்ளனர். 
 
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். 
 
இவர்களைத் தேடும் பணியில் உறவினர்களும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. 
 
காணாமல் போன இந்த இரு மீனவர்கள் தொடர்பில் இந்திய கடலோர காவல் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.