ஒருதொகை சட்டவிரோதமான பொருட்கள் மீட்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஒருதொகை சட்டவிரோதமான பொருட்களை இலங்கை சுங்கத்தின் மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உளுந்தே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

இந்தியாவில் இருந்து மூன்று கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 66 மெட்ரிக் தொன் உளுந்து இங்கு பரிசோதிக்கப்பட்டது.

உளுந்து இறக்குமதிக்கு இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதி அவசியம், இருப்பினும், இவை அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது.