update: காணாமல்போன அனலைதீவு மீனவர்கள் இருவரும் தமிழகத்தில் கரை சேர்ந்தனர்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவின் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரிடம் பொலிஸார் மற்றும் கரையோர காவல் படையினர் விசாரணைகளை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம் (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts