இலங்கையில் சிறுமிக்கு நடந்த கொடூரம்: வீடியோ வெளியிட்ட இளைஞனுக்கு ரூ.5 லட்சம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் சிறுமி ஒருவர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்திய வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, தாக்குதல் நடத்திய குகுல் சமிந்த என்ற சந்தேகநபர் பொலிஸாரினால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந் நிலையில், சந்தேகநபர், சிறுமியை தாக்கும் வீடியோவை  வெளியிட்ட இளைஞன் இன்று பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டதுடன்,

அந்த இளைஞனுக்கு 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

தருஷ சந்தருவான் கொடிகார என்ற இளைஞனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.