இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி: சுப்பர் – 8 சுற்றுக்கு தகுதி பெற்றது

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20  ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Nitish Kumar அதிகபட்சமாக 27 ஓட்டங்களையும், Steven Taylor 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Arshdeep Singh 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் Suryakumar Yadav ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றதுடன், Shivam Dube 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏ குழுவில் இருந்து முதல் அணியாக  சுப்பர் - 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.