சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மகிழ்ச்சி செய்தி

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறவுள்ளது.

எனவே, சுமார் 336 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் மற்றும் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த இது வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Trending Posts