தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முக்கிய செய்திகள் 2

வெளிநாடுகளில் இருந்து தீப்பெட்டிக்கு சமமான லைட்டர் வகைகளை இறக்குமதி செய்வதால், உள்ளூர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் தமது தொழிலை பாதுகாத்து தருமாறு கோரி தீப்பெட்டி தொழிலாளர்கள் இன்று விாழக்கிழமை (13) கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவிற்கு முன்னாள் இடம் பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உள்ளூர் கைத் தொழிலாக உயர் மட்டத்தில் இருந்த தீப்பெட்டி தொழில் தற்போது வீழ்ச்சியடைந்து ஒரு சில தொழிற்சாலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது 5000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை நேரடியாக நம்பி இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமது தொழிலை பாதுகாத்து தருமாறு அவர்கள் உரியவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.