குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

முக்கிய செய்திகள் 2

கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரத்தில் பாரிய அளவிலான குளவிக் கூடு ஒன்று காணப்பட்டிருந்த நிலையில் குளவிகள் கலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் தற்பொழுது 18 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியதுடன், மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து அனத்த முகாமத்துவ பிரிவினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால், பொலிசாருக்கும் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த குழுவினர் கூட்டினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஏனைய அனைத்து மாணவர்களும் உடனடியாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.