ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூவர் கைது!

முக்கிய செய்திகள் 3

கிளிநொச்சி – ஏ9 வீதியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைதானவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலரும், குறித்த டொலரை மாற்றுவதற்கான சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Trending Posts