இம்மாதம் இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். 
 
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
 
அத்துடன், இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை உறுதிப்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.