சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு: 27 ஆயிரம் பேர் வெளியேற்றம்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

சீனாவின் புஜியான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் 386 நகரங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவானது. இதனால் நான்பிங், சான்மிங் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 3 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகின.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக 27 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.