
மீன் பிடி இழுவை படகில் 150 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை தென் கடல் பகுதியில் 400 கடல் மைல் தொலைவில் ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட இழுவை படகு கைப்பற்றப்பட்டது.
இந்த இழுவை படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொண்டதில் அதிலிருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், படகிலிருந்த 6 பேரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.