வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் கைது!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வெளிநாட்டில்  தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன்  மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர் .   

கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது இவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மீனவர் ஒருவரே இவ்வாறு கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார் . 

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.