இலங்கை கிரிக்கெட் சபைக்கான புதிய யாப்பு வரைவு கையளிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கை கிரிக்கெட் சபைக்கான புதிய யாப்பு வரைவு இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அரசியலமைப்பு வரைவு கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையை மறுசீரமைப்பதோடு, தேசிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் நிர்வாகம், பயிற்சி மற்றும் வீரர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் இதில் உள்ளடங்கியுள்ளது.