இராமநாதன் கல்லூரியின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் எனது பங்களிப்பு எப்போதும் தொடரும்: அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பாடசாலை சமூகத்தின் நலன்களை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்ற வகையில் அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியின் அபிவிருத்தி அதன் வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் தன்னுடைய பங்களிப்பு எப்போதும் தொடரும் என தெரிவித்துள்ளார்.

யாழ் மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் பாடசாலை சமூகத்தினரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அங்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாடசாலையின் அபவிருத்தி அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் பாடசாலை சமூகத்தினருடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

மேற்படி கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக்றஞ்சன் மற்றும் பலர் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது