அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் பலி

முக்கிய செய்திகள் 3

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (14) மீன்பிடி தடைக்காலம் முடிவதற்கு முன்பாகவே முறையான அனுமதி எதுவும் பெறாமல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சுதர்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ஐந்து மீனவர்கள் சென்ற நிலையில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம் அடைந்ததை அடுத்து அதில் இருந்த இரண்டு நபர்கள் அருகில் இருந்த படகு மூலம் மீட்கப்பட்டு கரை சேர்ந்தனர்.

இந்த நிலையில் ஆரோக்கியம், பரகத்துல்லா என்ற இரண்டு மீனவர்கள் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல்படை, கடலோர காவல் குழும பொலிஸார் உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல்களை நேற்று (15) மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற முதல் நாளே இரண்டு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.