உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன. வடகொரியாவிடம் இருந்து ரஷியா ஆயுதங்கள் பெறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் கடந்த ஆண்டு ரஷியா சென்றிருந்தார். அப்போது ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக நாளை புதின் வடகொரியா செல்கிறார். வடகொரியா செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ராணுவம் ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்து பேசுவார்கள் எனத் தெரிகிறது.
ரஷியா இது உறுதிப்படுத்திய நிலையில், வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் இது தொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை. புதின் ரஷியா சென்றால், கடந்த 24 வருடத்தில் முதல் பயணம் இதுவாக இருக்கும்.
உக்ரைனுக்கு எதிராக பீரங்கிகள், ஏவுகணைகள், மற்ற ராணுவ பொருட்கள் வழங்கி உக்ரைன் மீதான ரஷியா தாக்குதல் நீட்டிக்க வடகொரிய உதவி செய்து வருவதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் ஆயுதங்கள் பரிமாற்றம் நடைபெறவில்லை என வடகொரியா மற்றும் ரஷியா தெரிவித்து வருகின்றன.