வீதியில் சென்றவர்கள் மீதும் நீர்த்தாரை தாக்குதல்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.  

சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் உடனடியாக  தொழில் வழங்குமாறு கோரி பத்தரமுல்லை தியத உயன முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் சுமார் 40,000 பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது, வீதியில் செல்லும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Trending Posts