தளபதி விஜய் பர்த்டே ஸ்பெஷல்: கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதைத்தொடர்ந்து, கோட் படத்தின் இரண்டாவது பாடலான "சின்ன சின்ன கண்கள்" பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அடுத்த சர்ப்ரைசாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், " தளபதி விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வேணாமா..! நள்ளிரவு 12.01 மணிக்கு சந்திப்போம்..ஏனென்றால் இது கோட் பிறந்தநாள் ஷாட்ஸ்" என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டது. பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை வேகமாக நெருங்கியுள்ளது.

https://twitter.com/i/status/1804232396218470594