திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறை செல்பவர்கள் அதிகரிப்பு

முக்கிய செய்திகள் 2

திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டில் 1,202 பேரும், 2022ஆம் ஆண்டில் 3,956 பேரும், 2023ஆம் ஆண்டில் 5,687 பேரும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைத் திணைக்கள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் 19 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2022ல், 49 ஆகவும், 2023ல், 61 ஆகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.