
சீன ரொக்கெட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருளொன்று விழுந்ததால் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அச்சமடைந்த மக்கள் வீதிகளில் ஓடும் காட்சிகளை பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுப்பி வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது சீன ரொக்கெட்டின் சிதைவு என்றே ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
அவை கடந்த சனிக்கிழமை சீனாவினால் ஏவப்பட்ட Long March 2C எனப்படும் ராக்கெட்டின் பாகங்கள் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிச்சுவான் எல்லையில் உள்ள Guizhou மாகாணத்தில் உள்ள Xianqiao கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான அந்த பொருட்கள் விழுந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறு குழந்தைகள் உட்பட கிராம மக்கள் தப்பிச் செல்வதையும் காணொளி காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், நேற்று பிற்பகல் பல சீன சமூக ஊடகங்கள் சம்பவம் தொடர்பான பல காணொளிகளை நீக்கியுள்ளன.