அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு – 7 சந்தேகநபர்கள் கைது

முக்கிய செய்திகள் 1

அதுருகிரியவில் கிளப் வசந்த உள்ளிட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் உட்பட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அவ்வப்போது 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துருகிரிய நகரில் நேற்று(08) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல வர்த்தகரான ‘க்ளப் வசந்த’ எனப்படும் சுரேந்திர வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

இதனிடையே, இலங்கையின் பிரபல பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.