2024 உயர்தரப் பரீட்சை – ஒன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

முக்கிய செய்திகள் 2

2024ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான ஒன்லைன் முறைமையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளையுடன்(10) முடிவடையவிருந்த நிலையில், ஜூலை 12ம் திகதி வரை 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பந்களுக்கான இறுதி திகதி எக்காரணத்திற்காகவும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.