8, 9 ஆம் திகதிகளில் வேலை வந்தவர்களுக்கு சம்பளம் உயர்வு!

முக்கிய செய்திகள் 2

2024 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம், 9 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த, நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு, செவ்வாய்க்கிழமை (09) சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.