சிறந்த வீரருக்கான விருதை வென்றார் பும்ரா!

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து ICC கௌரவித்து வருகிறது. 
 
ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ICC அறிவித்தது. 
 
இந்தப் பரிந்துரை பட்டியலில் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் அசத்திய இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா, இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்களை அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானின் குர்பாசும் இடம் பெற்றிருந்தனர். 
 
இதனடிப்படையில் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். 
 
இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியிலும் தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றமை குறிப்பிடத்தக்கது. 
 
சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா வென்றுள்ளார்.