அநுராதபுரத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஏழு பேர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அநுராதபுரம் பிரதேசத்தில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பமுனுத்துவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய ஏழு பேர் நேற்று (8) கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கலென்பிந்துனுவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிரிவடுன்ன , மந்தாரம்நுவர , அலவ்வ , படிகாரமுல்ல , குருணாகல் மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28, 32, 37, 38, 40, 50 மற்றும் 59 வயதுடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.