யாழ் மாவட்ட மீனவர்களுக்கான சீனாவின் பொருத்து வீடுகள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ் மாவட்ட மீனவர்களுக்கான சீனாவின் பொருத்து வீடுகள் இன்று  செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் கொண்டு செல்லபட்டுள்ளன.

வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சீன அரசாங்கம் 500 வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில்  யாழ் மாவட்டத்துக்கு 116 பொருத்துவீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்நிலையில் யாழ்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 116 பொருத்து வீடுகள் பாரவூர்த்திகள் மூலம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

இவ்வாறு கொண்டு செல்லபட்ட வீடுகள் அனைத்தும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பொறுப்பில் நாவற்குழியில் அமைந்துள்ளஅரச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.