உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி உயிரிழப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு - உஸ்வெட்டகெய்யாவ வீதியில் உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பிலிருந்து உஸ்வெட்டகெய்யாவ நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் பயணித்த பெண் பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பெண் பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது, வேன் சாரதி தப்பிச் சென்று பின்னர்  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.