லங்கா பிரிமியர் லீக்: கண்டி ஃபெல்கன்ஸ் அணி அபார வெற்றி

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபெல்கன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கண்டி ஃபெல்கன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 
 
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது. 
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபெல்கன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. 
 
கண்டி ஃபெல்கன்ஸ் அணி சார்பாக தினேஷ் சந்திமால் 37 பந்துகளில் 89 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்று கண்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
 
ஜஃப்னா கிங்ஸ் அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 59 பந்துகளில் 119 ஓட்டங்களைப் பெற்றார். 
 
இருபதுக்கு 20 போட்டியில் அவர் பெற்ற முதல் சதம் இதுவாகும்.