தேசிய கொடியை அவமதித்தாரா ரோகித் சர்மா? – விமர்சிக்கும் ரசிகர்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

டி20 உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பார்படாஸ் மைதானத்தில் இந்தியக் கொடியை நட்டு வைப்பது போன்ற படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ப்ரொபைல் படமாக வைத்தார்.

தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரோகித் சர்மா மூவர்ணக் கொடியை அவமதித்து விட்டதாக கூறி அவரின் ப்ரொபைல் படத்தை பகிர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2-இன்படி, தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. ஆனால் ரோகித் மண் தரையில் தேசிய கோடியை நட்டு வைத்து அவமதித்து விட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.