2025ஆம் ஆண்டுக்கான பாதீடு?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டு யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இதற்காக அரச நிறுவனங்களின் பாதீட்டு அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் குறிப்பிட்டார். 
 
அதற்கமைய மதிப்பீட்டு அறிக்கைகளை கோரும் நடவடிக்கைகளும் அதே சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படுமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.