மன்னாரில் மீண்டும் இராணுவ சோதனைச் சாவடி!

முக்கிய செய்திகள் 1

மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – அத்துருகிரிய பிரதேசத்தில், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், மன்னாருக்கு சென்று கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்தே குறித்த சோதனைச் சாவடி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.