
இலங்கை - தோஹா இடையிலான விமான சேவையின் எண்ணிக்கை இன்று (10) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கட்டார் எயர்வேய்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 05 நாளாந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 06 ஆக அதிகரிக்கவுள்ளது.
இலங்கைக்கு பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் அதிகளவான தெரிவுகளை வழங்குவதே இதன் நோக்கமாகுமென கட்டார் எயர்வேய்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.