ரயில் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில்!   

முக்கிய செய்திகள் 2

நாடளாவிய ரீதியில் நேற்று (9) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்று (10) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் பல ரயில் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.