மஹியங்கனையில் 2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

முக்கிய செய்திகள் 1

மஹியங்கனை பிரதேசத்தில் 2 கிலோ 350 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மஹியங்கனை பெலிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்துக்கு இடமான பகுதியைச் சுற்றி வளைத்த போது கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளைப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பலிபான ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோபா டபிள்யூ.எம். விஜேரத்ன, தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றின் ஆஜர் படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.