ஜனாதிபதி பதவிக்காலம் – அரசியல் யாப்பில் மாற்றம்

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆறு ஆண்டுகளுக்கு மேல்' என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.