கஹத்துடுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து

முக்கிய செய்திகள் 1

கஹதுடுவ, பொல்கஸ்ஓவிட்ட, ரிலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (10) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஹொரணையிலிருந்து பயணித்த தனியார் பஸ் ஒன்று ரிலாவல நோக்கி பயணிப்பதற்காக வீதியின் வலது பக்கமாக திரும்ப முற்படும் போது பஸ்ஸின் வலது பக்கமாக பாதுகாப்பற்ற முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.